- மதுரை வடக்கு
- கம்பம் செல்வேந்திரன்
- மதுரை
- திமுக
- ஜனாதிபதி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- பெருநகர மாவட்டம்
- செயலாளர்...
மதுரை, டிச. 16: திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ எனும் பிரச்சாரத்தை துவக்கியதை தொடர்ந்து, திமுகவினர் தரப்பில் வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ ஆலோசனையின் படி, வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.புதூர் பகுதி 10வது வார்டு கொடிக்குளத்தில், 76வது பாக வாக்குச்சாவடி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வட்டச் செயலாளர் ஆழ்வார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பெ.குழந்தைவேலு, மாநில தீர்மானக் குழு செயலாளர் அக்ரி கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.கே.ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்றார். வடக்கு தொகுதி பொறுப்பாளரான முன்னாள் எம்பி கம்பம் செல்வேந்திரன் வாக்குச்சாவடி உறுப்பினர்கள் தேர்தல் பரப்புரையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதில் மாமன்ற உறுப்பினர் முத்துக்குமாரி ஆழ்வார், திமுக நிர்வாகிகள் பெரியசாமி, மாதவன், தினேஷ், மருது, சேக் அகமது, ஆனந்த், சித்திக், பிரபாகரன் உள்ளிட்ட திரளான வாக்குச்சாவடி உறுப்பினர்கள் திமுகவினர் பங்கேற்றனர்.
