×

பச்சிளம் பெண் குழந்தை திடீர் சாவு

தர்மபுரி, டிச.17: தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், டிரைவரான இவரது மனைவி இசைப்பிரியா. இவர்களுக்கு சமீபத்தில் பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இசைப்பிரியா குழந்தையுடன், பெல்லுஅள்ளு பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை, வழக்கம்போல் குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது, குழந்தை அசைவில்லாமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இசைப்பிரியா, குழந்தையை தூக்கிக் கொண்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறந்த 29 நாட்களேயான நிலையில் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Dharmapuri ,Vijayakumar ,Marandalli ,Dharmapuri district ,Isaipriya ,Papparapatti ,Belluallu ,
× RELATED இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் ஜெட் சேவையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்