திருப்பரங்குன்றம்: மதுரை அருகே திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வழக்கமாக அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 1 மணிக்கு சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு சாத்தப்படும். மார்கழி மாதத்தில் மட்டும் கோயில் நடைதிறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இன்று மார்கழி மாதம் பிறப்பதை முன்னிட்டு, இன்று முதல் ஜன.14ம் தேதி வரை இக்கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு சாத்தப்படும். பின்னர், மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
