பெரணமல்லூர், டிச.16: பெரணமல்லூர் அடுத்த கொழப்பலூர் பகுதியை சேர்ந்தவர்கள் அம்சா, லதா, லோகநாயகி ஆகிய 3 பெண்கள் மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்வதற்கு மாலை அணிய அதே பகுதி சேர்ந்த அலமேலு என்பவரை பார்க்க கடந்த 12ம் தேதி அவரது வீட்டிற்கு நடந்து சென்றனர். அப்போது கொழப்பலூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது, கொழப்பலூர் கூட்ரோடு நோக்கி பின்னால் வந்த பைக் திடீரென எதிர்பாராத விதமாக மோதியதில் அம்சா, லதா மற்றும் லோகநாயகி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதியினர் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அம்சா நேற்று முன்தினம், பெரணமல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், பைக் ஓட்டி வந்து விபத்திய ஏற்படுத்தியது, கெங்காபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என தெரியவந்தது. தொடர்ந்து பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
