×

லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி

ஈரோடு, டிச.15: மதுரை மாவட்டம் சிதம்பரம்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (31). இவர் தனது மனைவி பிரியாவுடன், பெருந்துறை அடுத்த எல்லைமேட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். கடந்த 12ம் தேதி, இளையராஜா, நண்பர் தினேஷ்குமாருடன் பெருந்துறை சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்புவதற்காக, சென்னிமலை ரோட்டில் செந்தூர்மஹால் அருகே, அவர்கள் இருவரும் நடந்து வந்தனர்.

அப்போது, பின்னால் வந்த லாரி இளையராஜவின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இளையராஜாவை பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இளையராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், விபத்தை ஏற்படுத்திய, திண்டுக்கல்லை சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணியை (53) பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

 

Tags : Erode ,Ilayaraja ,Chidambarampatti ,Madurai district ,Priya ,Perundurai ,Dinesh Kumar.… ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...