ஈரோடு, டிச.15: சிறுவலூர்அடுத்த நரிகுட்டை பெருமாள் கோயில் அருகே சிலர் சேவலை வைத்து சூதாடுவதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதியில் சிறுவலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சேவலை வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அதில், இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், திங்களூர் அடுத்த பச்ச கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த செல்வன் (48), பதிபாளையத்தை சேர்ந்த சுரேஷ் (42), ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த இரு சேவல்களையும், ரூ.950 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
