கலவை: திருவண்ணாமலையை சேர்ந்தவர் குமரேசன்(50), இவரது மகள் திருமணமாகி ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த எல்.என்.புரம் பகுதியில் வசித்து வருகிறார். கர்ப்பிணியான அவருக்கு நேற்று சீமந்தம் நடத்த குமரேசன், மனைவி, மகன் மற்றும் உறவினர்களுடன் பஸ்சை வாடகைக்கு எடுத்து சென்றுள்ளார். மேச்சேரி இணைப்பு சாலை அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் குமரேசன்(50), அவரது மைத்துனர் ராஜீவ்காந்தி(42) ஆகியோர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.
