- பா.ம.க.
- அன்புமணி
- ராமதாஸ்
- அருள் எம்.எல்.ஏ பகீர்
- சேலம்
- சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க.
- வன்னியார்
- மாநில இணைப் பொதுச் செயலாளர்
- அருல் எம். எல்.
சேலம்: சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக சார்பில், வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து, மாநில இணை பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ பேசியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ் 46 ஆண்டு காலம் பொதுவாழ்வில் ஈடுபட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 96 ஆயிரம் கிராமங்களுக்கு நேரடியாக சென்று இந்த இயக்கத்தை உருவாக்கியுள்ளார். ஆனால் சிலர் பாமகவை அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர். பெற்ற தந்தையையே கொலை செய்வதற்கு அன்புமணி முயற்சி செய்து வருவது வேதனை அளிக்கிறது.
ஒட்டுமொத்த வன்னியர்களும் ராமதாஸ் கீழ் தான் இருக்கின்றனர். ஆனால் அன்புமணிக்கு பின்னால் துரோகிகளும், கொலைகார கைக்கூலி கூட்டங்களும்தான் உள்ளன. வாழப்பாடி அருகே என்னை கொலை செய்ய முயன்றவர்களுக்கு தலா ரூ.50,000 கூலியாக கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது எம்எல்ஏ சீட்டுகளை வாங்கியது மட்டுமல்லாமல், 10.5% இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் ராமதாஸ். தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
