×

மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் ரூ.3.40 கோடியில் மினி விளையாட்டு மைதானம்

மதுக்கரை, டிச. 12: கோவை அடுத்த மலுமிச்சம்பட்டி, அம்பேத்கர் நகர் பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.3.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த திங்கள்கிழமை சென்னையில் இருந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம், பணிகளை துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அம்பேத்கர் நகர் பகுதியில் பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஜேசிபி இயந்திரத்தின் மூலம் நிலத்தை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு அமையவுள்ள விளையாட்டு அரங்கத்தில் நிர்வாக கட்டிடம், ஓட்டப்பந்தய மைதானம், கால்பந்து மைதானம், கைப்பந்து மைதானம், திறந்தவெளி கபடி மைதானம், கூடைப்பந்து மைதானம், நீளம் தாண்டுதல் மைதானம், நடைபாதை, அரங்கம், கோகோ மைதானம், கிரிக்கெட் மைதானம் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

இங்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருவதால், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Malumichampati Oradchi ,Madhukarai ,Government of Tamil Nagar ,Malumichampati, Ambedkar Nagar ,Chennai, Tamil Nadu ,MLA ,K. Stalin ,
× RELATED முதியவர்களுக்கு உணவு கொடுத்த காவலாளி மீது தாக்குதல்