கோவை: கோவை மருதமலை சுப்ரமணியசுவாமி கோயிலில் வரும் 3ம் தேதி மதியம் 3.30 மணி முதல் 6.47 மணி வரை சந்திரகிரஹணம் நிகழவுள்ளதால் பக்தர்கள் கோயில் அடிவாரத்தில் மதியம் 1 மணி வரை மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நடை திறப்பு அடுத்த நாள் 4ம் தேதி காலை 6 மணிக்கு நடக்கும். அந்த நேரத்திலிருந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் துணை ஆணையர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
