×

ஆவாரம் குளத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்

அன்னூர், பிப்.28: கரியம்பாளையம் ஊராட்சி, எல்லப்பாளையம் பிரிவு எதிரே 80 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரம் குளம் உள்ளது. இந்த குளத்தில் கௌசிகா நீர் கரங்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் 3 ஆண்டுகளாக குள கரைகளை பலப்படுத்துதல், மழை நீர் வழிப்பாதை சீர்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் குளக்கரையில் இருந்த 10 ஆண்டுகளான வேப்ப மரங்களை அருகில் உள்ள நிறுவனத்தினர் கட்டுமான பணிக்காக வெற்றி அகற்றியுள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தன்னார்வலர்கள் இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்திற்கும், ஒன்றிய அலுவலகத்துற்கும் தகவல் தெரிவித்தனர. நன்கு வளர்ந்த பச்சை மரங்களை வெட்டி அகற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அகற்றப்பட்ட மரங்களை விட 5 மடங்கு மரங்களை நட வேண்டும் என தன்னார்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Avaram pond ,Ellapalayam ,Kariyampalayam ,Kausika ,Neer Karangal ,
× RELATED 9 பவுன் நகை திருடிய பக்கத்து வீட்டுக்காரர் கைது