பெ.நா.பாளையம்: கோவை துடியலூரில் இருந்து இடிகரை செல்லும் சாலையில் உள்ள ஆசிரியர் காலனி பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு மேலாளர்களாக வேலாயுதம், கார்த்திக் ஆகியோர் பணி புரிகின்றனர். நேற்று முன்தினம் இருவரும் தொழிலாளர்கள் வேலை முடிந்து செல்லும்போது வழக்கமாக சோதனை செய்யும் நுழைவாயில் முன்பு நின்றிருந்தனர்.
அப்போது சூப்பர்வைசராக பணி புரியும் இடிகரை மணிகாரம்பாளையம் மாருதி நகர் பகுதியை சேர்ந்த மோசஸ் ராஜ் (38) என்பவர் வந்துள்ளார். அவரை சோதனை செய்தபோது 1.5 கிராம் எடை கொண்ட உலோக பொருட்கள் மறைத்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு 8,500 ரூபாய். இது தொடர்பாக வேலாயுதம் துடியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மோசஸ்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிலையில் அடைத்தனர்.
