- Mayam
- கிருஷ்ணகிரி
- ஆரோக்கியராஜ்
- ஜக்கப்பா நகர் 8வது தெரு, கிருஷ்ணகிரி
- மோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
- பாலின் மேரி
- ஆரோக்கியராஜ்…
கிருஷ்ணகிரி, டிச.12: கிருஷ்ணகிரி, ஜக்கப்ப நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (58). இவர் மோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பவுலின் மேரி. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம், ஆரோக்கியராஜ் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் டவுன் போலீசில், கணவர் மாயமானது குறித்து 11 ஆண்டுகளுக்கு பிறகு, பவுலின் மேரி புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
