டெல்லி: நாட்டில் செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகள் பயன்படுத்துபவர்களில் 17.7 சதவித மக்கள் மட்டுமே சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் வழிமுறைகளை அறிந்துள்ளனர் என்பதை சுட்டிகாட்டி அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் 2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் சைபர் குற்றங்கள் 31.2 சதவீதம் பெருகியிருப்பதை ஒன்றிய அரசு அறிந்திருக்கிறதா என கேட்டுள்ள அவர், பெண்கள் மற்றும் முதியோர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசிடம் உள்ள சிறப்புத் திட்டங்கள் பற்றியும் கேட்டுள்ளார். சைபர் குற்றங்களை நிவர்த்தி செய்ய மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள நிதிகள் பற்றிய விவர்ங்கள் என்ன என்றும் திருச்சி சிவா கேட்டுள்ளார்.
