ஞானதேசிகன் மறைவுக்கு சர்வ கட்சியினர் அஞ்சலி

வத்தலகுண்டு, ஜன. 17: தமிழ்மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஞானதேசிகன் வத்தலக்குண்டுவில் பிறந்தார். இவரது மறைவையொட்டி, நகரில் சர்வ கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி ஞானதேசிகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். திமுக ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சின்னதுரை, மதிமுக ஒன்றியச் செயலாளர் மருது ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி உலக நம்பி, தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் ராமகிருஷ்ணன், திமுக நிர்வாகிகள் சிதம்பரம், பேக்கரி முருகேசன், கோபால், சகாப்தின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல நடந்த இன்னொரு நிகழ்ச்சிக்கு பாஜ ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி சீனிவாசன், அமமுக ஜெ பேரவை மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட நிர்வாகி தங்கபாண்டி, சமூக ஆர்வலர் தங்கபாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>