×

வேப்பம்பட்டில் மின்சாரம் தாக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி

திருவள்ளூர், டிச.10:திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு வள்ளலார் நகரை சேர்ந்த தர்மேந்திரன் (45). இவரது மனைவி தீபா (40). இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தர்மேந்திரன் திருநின்றவூர் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர் பால் சிங். இவர் வேப்பம்பட்டு, பூங்காவனத்தம்மன் கோயில் தெருவில் ஜோதிட கற்கள் விற்பனை செய்யும் கடையை திறப்பதற்காக தயார் செய்து வருகிறார். இதற்காக தர்மேந்திரன் அந்த கடைக்கு விளம்பர போர்டு வைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, விளம்பர போற்றி மாட்டுவதற்காக மேலே தூக்கும் போது மேல் பகுதியில் செல்லும் மின்சார வயரில் விளம்பர போர்டு பட்டு மின்சாரம் தாக்கி தர்மேந்திரன் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருநின்றவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக திருவள்ளுவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அவரது மனைவி தீபா செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Home Guard ,Veppampattu ,Thiruvallur ,Dharmendran ,Vallalar Nagar, Veppampattu ,Deepa ,Thiruninravur police station ,Pal Singh.… ,
× RELATED ஓரமாக போக சொன்னதால் ஆத்திரம் பெண்...