×

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு தொடக்கம்

திருவள்ளூர், மார்ச் 11: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு (11ம் தேதி) இன்று முதல் தொடங்கி வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 31,483 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு (11ம் தேதி) இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 15,742 மாணவர்களும், 15,741 மாணவிகளும் என மொத்தம் 31,483 மாணவ, மாணவிகளும், 1,461 பேர் தனித்தேர்வர்களும் என மொத்தம் 32,944 பேர் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.

இந்த, 10ம் வகுப்பு அரசு பொதுதேர்விற்காக 149 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 13 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 485 ஆசிரியர்கள் சொல்வதை எழுதுபவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த, தேர்வினை கண்காணிக்க 1654 அறை கண்காணிப்பாளர்களும், 149 முதன்மை கண்காணிப்பாளர்களும், 15 கூடுதல் துறை அலுவலர்களும், 215 நிலையான பறக்கும்படையினரும் என மொத்தம் 2667 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Thiruvallur district ,THIRUVALLUR ,10TH CLASS GOVERNMENT ,ELECTION ,
× RELATED 100 நாள் வேலை திட்ட குறை தீர்ப்பாளர் நியமனம்