விரைவில் மெகா கூட்டணி சொல்கிறார் அன்புமணி

தர்மபுரி: தர்மபுரியில் இன்று நடந்த பாமக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கட்சியின் தலைவர் அன்புமணி கலந்துகொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு வருவது போல் இல்லை. வரும் 17ம் தேதி எனது தலைமையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இதில் பங்கேற்க அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் வெற்றிக்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதே காரணம். சட்டமன்ற தேர்தலுக்காக விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்றார். தொடர்ந்து அவரிடம் ஜி.கே.மணி புகார் குறித்தும், தனது பெயரை அன்புமணி குறிப்பிட்டு துரோகி என்று சொன்னால் கட்சியில் இருந்து விலக தயார் எனவும் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, பதில் சொல்ல விரும்பவில்லை என அன்புமணி கூறினார்.

Related Stories: