- ஐயப்பன் கோவில்
- Kumbabhishekam
- உடுமலை
- மகா
- சர்க்கார் கன்னிபுத்தூர் ஐயப்ப சுவாமி கோவில்
- மடத்துக்குளம்
- முலபாரி சாலை
- விக்னேஸ்வரா
- பூஜை
- கணபதி ஹோமம்
- நவக்கிரக ஹோமம்
- வாஸ்து சாந்தி
- சுதர்சன ஹோமம்
- பூர்ணாகுதி
உடுமலை, டிச. 8: மடத்துக்குளம் அருகேயுள்ள சர்க்கார் கண்ணாடிபுத்தூர் ஐயப்பன் சாமி கோயில் மகா கும்பாபிஷகம் நேற்று நடைபெற்றது. 6-ம் தேதி முளைப்பாரி வீதி உலா, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, சுதர்சன ஹோமம், பூர்ணாகுதி, ரக்ணா பந்தனம், திரவ்யாகுதி, யந்திர ஸ்தாபனம், சாமி நிலை நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று சுமங்கலி பூஜை, உபச்சார பூஜை, நாடிசந்தனம், மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திருமஞ்சனம், திவ்ய அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
