கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 231, வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்கள் எடுத்தன. பின், 2வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து, கேப்டன் டாம் லாதம் 145 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 178 ரன்னும் விளாசியதால், 8 விக்கெட் இழப்புக்கு 466 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அதையடுத்து 531 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. 4ம் நாளான நேற்று, வெஸ்ட் இண்டீஸ், 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்திருந்தது. இன்னும் 319 ரன் தேவை என்ற நிலையில், இன்று 5ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
