- புள்ளமங்கலம்,
- மன்னாய் கிழக்கு ஒன்றியம்
- மன்னார்குடி
- சட்டமன்ற உறுப்பினர்
- பூண்டி.கலைவாணன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- பள்ளி கல்வித் துறை
மன்னார்குடி, டிச.5: மன்னை கிழக்கு ஒன்றியம் புள்ளமங்கலத்தில் 82 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்எல்ஏ பூண்டி.கலைவாணன் வழங்கினார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவ – மாணவிகளுக்கு ஆண்டு தோறும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மன்னை கிழக்கு ஒன்றியம் புள்ளமங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு கல்விப் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. பெறோர்-ஆசிரியர் கழக தலைவர் ஐ.வி குமரேசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அரிச்சந்திரபுரம் செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் தசரதன் வரவேற்றார்
