- திருப்பூர்
- மின்சார விநியோகக் கழகம்
- திருப்பூர் பிரிவு
- திருப்பூர் மின்சார பகிர்மான வட்டம்
- திருப்பூர் மின்சார…
திருப்பூர், டிச. 3: திருப்பூர் கோட்டம், திருப்பூர் மின் பகிர்மான வட்டம் சார்பில் மின் பகிர்மான கழக களப்பணியாளர்களுக்கான மின் பாதுகாப்பு வகுப்பு நேற்று நடைபெற்றது.
அப்பாச்சி நகர் பகுதியில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க வளாகத்தில் திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில், ஊத்துக்குளி செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் கலந்துகொண்டு மின்வாரிய பணியாளர்கள் பணியின்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.
மின் பணியின்போது சிறிய அலட்சியம் பெரிய இழப்புகளை ஏற்படுத்துவதாகவும், மின்வாரிய பணியாளர்கள் வெறும் பணியாக மட்டுமல்லாது முன் களப்பணியாளர்களாக பொதுமக்களுக்கான சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் பணியின்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
