×

பைக் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

கோவை, டிச. 1:கோவை ஈச்சனாரியை சேர்ந்தவர் ராகுல் சக்ரவர்த்தி (20). ஆட்டோ டிரைவர். இவர் தனது விலை உயர்ந்த பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிவிட்டு சென்றனர். அதன் மதிப்பு ரூ.3 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தவிர, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

அதில் ஒரு பைக்கில் மூன்று பேர் வந்ததும், அவர்கள் ராகுலின் விலையுர்ந்த பைக்கின் சைடு லாக்கை லாவகமாக உடைத்து திருடிச்செல்வதும் தெரியவந்தது. பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், பைக் திருடி சென்றவர்கள் 17 வயது சிறுவன் மற்றும் 18 வயதான 2 பேர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 3 பேருமே மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், பைக் திருட்டில் கைது செய்யப்பட்டதில் ஒரு மாணவர் கால்டாக்சி நடத்தி வருவதும், அதற்கு வாங்கிய தவணையை செலுத்துவதற்காக பைக் திருடியதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

Tags : Coimbatore ,Rahul Chakravarthy ,Itchanari ,
× RELATED திடக்கழிவு மேலாண்மைக்கு 200 வாகனங்கள் அரசுக்கு மாநகராட்சி கோரிக்கை