- தமிழ்
- தமிழ்நாடு
- இலங்கை
- சென்னை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- புயல் டிட்வா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இலங்கை…
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:
டிட்வா புயல் காரணமாக இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும்-பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியும் இலங்கை மக்கள் அவதியுறுகின்றனர். இப்பெருந்துயரில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பங்கெடுக்கிறோம். இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு, இன்று(நேற்று) காலை 11:05 மணியளவில் முதற்கட்டமாக 177 பேர் (ஆண்கள்-113, பெண்கள்-60, குழந்தைகள்-4) தமிழ்நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.
டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஒன்றிய அரசின் மூலம் உணவுப் பொருட்கள்- மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றைத் தந்து, அவர்கள் மீண்டெழுந்திட உதவிக்கரம் நீட்டிடத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. இதற்காக ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திடத் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
