- சென்னை
- புயல் டிட்வா
- சென்னை விமான நிலையம்
- மதுரை
- திருச்சி
- தூத்துக்குடி
- சேலம்
- ஹைதெராபாத்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பெங்களூரு
- யாழ்ப்பாண
- இலங்கை…
சென்னை: டிட்வா புயல், கன மழை காரணமாக, சென்னையில் இன்று 47 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டிட்வா புயல், கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து, தமிழ்நாட்டின் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் மற்றும் ஐதராபாத், பெங்களூரு, இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் 27 புறப்பாடு விமானங்களும், அதேபோல, 27 வருகை விமானங்களுமாக மொத்தம் 54 விமானங்கள் நேற்று அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரையில் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் புயல் இன்னும் கரையைக் கடக்காமல், இன்று (ஞாயிறு) காலை கரையைக் கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து இன்று இரண்டாவது நாளாக சென்னை விமான நிலையத்தில் 36 உள்நாட்டு விமானங்கள், 11 சர்வதேச விமானங்கள் என மொத்தம் 47 விமானங்கள் ரத்து என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் 18 புறப்பாடு விமானங்களும், காலை 8.40 மணியிலிருந்து இரவு 11.30 மணி வரையில் திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் 18 விமானங்களும் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9.45 மணியிலிருந்து இரவு 9 மணி வரையில், இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் 5 விமானங்கள், யாழ்ப்பாணம் செல்லும் ஒரு விமானம் என 6 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 8.40 மணியிலிருந்து இரவு 8 மணி வரையில் இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் 4 விமானங்களும், யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை வரும் ஒரு விமானமுமாக மொத்தம் 5 வருகை விமானங்கள் இன்று ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து டிட்வா புயல் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 24 புறப்பாடு விமானங்கள், 23 வருகை விமானங்கள் என மொத்தம் 47 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே இன்று பயணிக்கும் விமான பயணிகள் அனைவரும் தங்கள் பயணிக்க வேண்டிய விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, பயண திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
