×

ஊட்டி அருகே குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டம்: மக்கள் பீதி

ஊட்டி: ஊட்டி அருகே குடியிருப்புகள் பகுதியில் வலம் வரும் புலியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 70வது வயது மூதாட்டியை புலி தாக்கிக் கொன்றது. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியது. இந்நிலையில் ஊட்டி அருகே உள்ள சோலூர் பகுதியில் மக்கள் வாசிக்கும் குடியிருப்பு பகுதியில் நாள்தோறும், புலி ஒன்று வலம் வருகிறது.

இதனை அப்பகுதி மக்கள் பார்த்தது மட்டுமின்றி அதனை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் குடியிருப்பு அருகே வரும் புலியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் இந்த புலியை அடர்ந்த காட்டிற்குள் விரட்ட வேண்டும் அல்லது கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Mawanalla ,Koodalur, Neelgiri district ,
× RELATED அதிமுக கூட்டத்தில் விசிலா? பிடுங்கி வீசி எறிந்த நிர்வாகி