சென்னை: சமூக வளர்ச்சிக்குப் பொருளாதாரம், உற்பத்தி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு, ஒரு சமூகத்தின் சிந்தனை வளர்ச்சிக்குக் கலைகள் முக்கியம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை & கவின்கலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும்; “சமூக வளர்ச்சிக்குப் பொருளாதாரம், உற்பத்தி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு, ஒரு சமூகத்தின் சிந்தனை வளர்ச்சிக்குக் கலைகள் முக்கியம்!
இன்று பட்டம் பெற்ற மாணவர்கள் காலத்தை வெல்லும் படைப்புகளைத் தந்து, தமிழ்ச் சமூகத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுத் தேருங்கள்! அதேவேளை, எந்த AI வந்தாலும் மனிதக் கற்பனையின் விரிவை வென்றுவிட முடியாது என்பதை உணர்ந்தவர்களாக உங்களது கலைப்பயணம் அமையட்டும்.
வள்ளுவர் தொடங்கி இசைஞானி வரை கலைகளை, கலைஞர்களை மதித்துப் போற்றும் நமது திராவிட மாடல் அரசு உங்களது முயற்சிகளுக்குத் துணைநிற்கும்” என முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.
