×

நெல்லையில் 1.22 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? 2 நாளில் 50 ஆயிரம் பேர் கூடியது எப்படி? கலெக்டர் சுகுமார் பேச்சால் சர்ச்சை

நெல்லை: நெல்லையில் எஸ்.ஐ.ஆர் தொடர்பாக அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் சுகுமார் பேசியதாவது:
நெல்லை மாவட்டத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை பிஎல்ஓ மொபைல் செயலில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. நேற்று (27ம் தேதி) காலை 10 மணி வரை 8 லட்சத்து 69 ஆயிரத்து 98 (61.28%) கணக்கீட்டு படிவங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நெல்லை மாவட்டத்தில் கண்டறிய இயலாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரட்டைப்பதிவு கொண்டவர்கள் என ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 946 (8.60%) வாக்காளர்கள் பெயர் உள்ளது கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 69 ஆயிரம் பேர் இறந்தவர்கள். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

நெல்லை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் பணி மூலம் கண்டறிய இயலாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரட்டைப்பதிவு கொண்டவர்கள் என 1.22 லட்சம் பேர் கண்டறியப்பட்டுள்ளதால், இந்த வாக்காளர்கள் அனைவரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளனர். கடந்த 25ம் தேதி நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய கலெக்டர், 78,000 வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது என கூறிய நிலையில், தற்போது 1.22 லட்சம் வாக்குகள் நீக்கப்பட உள்ளதாக தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் வாக்காளர்களை தேர்தல் அலுவலர்கள் கண்டுபிடித்து உள்ளார்களா? என்ற சந்தேகம் எழுவதாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags : Nellai ,Collector ,Sukumar ,SIR ,
× RELATED குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை...