உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் திருநங்கை, கர்ப்பிணி பெண்கள் மாணவர்களுக்கு உதவித்தொகை: மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை, பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் மேயர் பிரியாராஜன் ஏற்பாட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், 50 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த 500 மகளிர்களுக்கு சுயல்நிதி மற்றும் புத்தாடைகள், 200 கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் உபகரணங்கள், 100 திருநங்கைகளுக்கு புத்தாடை மற்றும் நிதியுதவி வழங்கினார். மேலும், 110 கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால உதவித்தொகை, புத்தாடை மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் 50 கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு க மடிக்கணிணி வழங்கப்பட்டது.

Related Stories: