ஆப்பக்கூடல் புதுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் புதுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, பள்ளி மேம்பாட்டு நிதி திட்டம் 2024-25ன் கீழ் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.இதனை நேற்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.புதிய பள்ளி கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் செல்வி சதாசிவம், துணைத்தலைவர் கொமாரசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: