×

2 சரக்கு வாகனம் திருட்டு

சேலம், நவ.27: சேலம் சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (35). இவர் கொம்பாடிப்பட்டி பகுதியில் சிமெண்ட் கடை நடத்தி வருகிறார். கடையில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி செல்வதற்காக 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சரக்கு வாகனத்தை பயன்படுத்தி வந்தார். இந்த வாகனத்தை கடை வளாகத்தில் இரவு நேரத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு வாகனத்தை சாவியுடன் கடை வளாகத்தில் டிரைவர் நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அங்கிருந்த சரக்கு வாகனம் திருடுபோயிருப்பது தெரிந்தது. இதுபற்றி ரஞ்சித்குமார் ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், சேலம் நெத்திமேடு கரியபெருமாள் கரடு பகுதியை சேர்ந்தவர் சீதா (31). இவர் கணவர் சக்திவேலுக்கு சரக்கு வாகனம் ஒன்றை வாங்கிக்கொடுத்திருந்தார். சக்திவேல் தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில், சரக்கு வாகனத்தை நெத்திமேடு பகுதியில் உள்ள இரும்பு கடை முன்பு நிறுத்திவிட்டு சென்னைக்கு சென்றிருந்தார். பின்னர் மீண்டும் திரும்பி வந்தபோது வாகனம் திருடு போயிருந்தது. இதுபற்றி அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் சீதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Salem ,Ranjith Kumar ,Seerakabadi ,Kompadipatti ,
× RELATED புதிய பஸ் ஸ்டாண்டில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு