சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர்.29ம் தேதி ஓரிரு இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு என்பதால் நவம்பர்.29ம் தேதி 6 மாவட்டங்களுக்கு மிக மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நவ.29ம் தேதி மிக மிக பலத்த மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
