×

பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் தேரோட்டம் கோலாகலம்

 

அவிநாசி: திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி அருகே பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நேற்று மாலை ஆறுமணியளவில் நடைபெற்றது. திருத்தேரில் கொண்டத்து காளியம்மன் ‘முத்தங்கி” அலங்காரத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், கோயில் செயல் அலுவலர் முருகன், அறங்காவலர்குழுத்தலைவர் மனோகரன் மற்றும் அறங்காவலர்கள் சுந்தரமுத்து, திருமூர்த்தி, பானுமதி, ஜெகநாதன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.

அலங்கரிக்கப்பட்ட பெரியதேர் அசைந்து, அசைந்து, ஆடி வருகை தந்தது. அப்போது, தேரோடும் வீதிகளின் மாடிகளில் நின்று, பொதுமக்கள் தேரின் மீது மலர்களை தூவி, பரவசத்துடன் வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள், “ஓம் சக்தி, பராசக்தி” என்கிற கோஷத்துடன் தேர் இழுத்து வந்தனர்.

 

Tags : Perumanallur ,Kondathu ,Kaliamman ,Perumanallur Kondathu Kaliamman Temple ,Avinashi ,Tiruppur district ,Kondathu Kaliamman ,Murugan ,Kuththalaivar… ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி...