×

எடப்பாடியின் பாதுகாப்பு ஜீப் மோதி வாலிபர் பலி

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று மாலை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் செய்தார். பின்னர் பிரசாரத்தை முடித்து விட்டு புதுக்கோட்டை மாவட்டம் சென்றார். சிவகங்கையில் இருந்து மதகுபட்டி வழியே அவரது வாகனம் சென்றது. மதகுபட்டி பகுதியில் செல்லும் போது அவருக்கு பின்னால் பாதுகாப்பிற்கு சிவகங்கை போலீஸ் ஜீப் சென்றது. அப்போது அவ்வழியே டூவீலரில் வந்த மதகுபட்டியை சேர்ந்த ஆறுமுகம்(27) மீது போலீஸ் ஜீப் மோதியது. இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Edappadi ,Sivaganga ,Edappadi Palaniswami ,Pudukkottai district ,Madakupatti ,
× RELATED 2026 மார்ச் மாதத்தில் 1.01 கோடி பயணிகள்...