×

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: லோக் போல் கருத்துக்கணிப்பு

 

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என லோக் போல் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. திமுக கூட்டணி 181 முதல் 189 இடங்கள் வரை வெல்லும். 40.10% வாக்குகளுடன் 189 இடங்கள் வரை திமுக வெல்லும் என லோக் போல் கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 29% வாக்குகளுடன் 38 முதல் 42 இடங்களை அதிமுக கைப்பற்றும். தா.வே.க. 23.9% வாக்குகளுடன் 8 முதல் 10 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கணிப்பு.

அதிமுகவை விட 11%க்கும் அதிகமான வாக்குகளை திமுக பெறும் என லோக் போல் கருத்துக்கணிப்பு. கலைஞர் உரிமைத் தொகை போன்றவற்றால் திமுக கூட்டணிக்கு அமோக ஆதரவு நிலவுகிறது. விடியல் பயணம், காலை உணவு திட்டம் போன்றவை கிராமப்புற, சிறு நகர பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசின் திட்டங்கள் திமுக கூட்டணிக்கு உறுதியான முன்னிலையை கொடுக்கிறது. எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியிலேயே குழப்பம் நிலவுவதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அதிமுக கூட்டணி கட்சிகளில் உள்ள பிளவு, முக்கிய தலைவர்கள் கட்சி மாறியது போன்றவை தொண்டர்களின் மன உறுதியை சிதைத்துள்ளது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலினே தொடர வேண்டும் என 41% பேர் ஆதரவு அளித்துள்ளனர். திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை பரவலாக இல்லை எனவும் லோக் பால் கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Dimuka ,Chennai ,
× RELATED தி.மு.க.வையும் டீக்கடைகளையும்...