மசாஜ் சென்டர், அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில்; 2 புரோக்கர் கைது: 6 இளம் பெண்கள் மீட்பு

சென்னை, ஜன.11: அடையார் எஸ்பிஐ காலனியில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் எஸ்பிஐ காலனி ஜீவரத்தினம் நகர் 1வது தெருவில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன்(32) என்பவர் 4 இளம் பெண்களை வைத்து மசாஜ் சென்டருக்கு வரும் நபர்களை மயக்கி பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. போலீசார் வேல்முருகனை கைது செய்து அவரிடம் இருந்து 4 இளம் பெண்கள் மீட்டனர்.

இதேபோல், அடையார் காந்தி நகர் 1வது மெயின் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலின்படி போலீசார் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தச்சூர் கூட்ரோடு பகுதியை ேசர்ந்த வெங்கடேசன்(27) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து 2 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம் பெண்கள் மீட்டனர்.

Related Stories:

>