நெல்லை இஸ்ரோ மைய வளாகத்தில் சிஐஎஸ்எப் வீரர் தற்கொலை

நெல்லை: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் துர்பதாலா பூ (28). இவர் கடந்த 2021ம் ஆண்டு ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) பிரிவில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தற்போது நெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மைய வளாகத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊரான ஒடிசா மாநிலத்திற்கு சென்று விட்டு சில நாட்களுக்கு முன் வேலைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவர் அங்குள்ள அறை மின்விசிறியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: