சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், தியோடர் ராபின்சன், பாஸ்கரன், ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: அறிவித்த வாக்குறுதிகளையும், உறுதிமொழிகளையும் காலம் கடத்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதன் தொடர்ச்சியாக சென்னையில் நவம்பர் 25ல் நடந்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோவின் 10 அம்ச கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அதன்படி, வட்டார அளவில் பிரச்சார இயக்கம் மேற்கொள்வது, டிசம்பர் 13ல் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணவிரதம், டிசம்பர் 27ல் மாவட்ட தலைநகரில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆகியவற்றில் ஈடுபடுவது என முடிவெடுத்துள்ளது.
