கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஒன்று பூண்டி மலைக்கிராமம். இந்த மலைக்கிராமத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இங்குள்ள மக்களுக்கும், விவசாய பாசனத்திற்கும், கீழ்மடை பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து சோலும்பாறை மண்பாதை வாய்க்கால் வழியாக நீர் விநியோகம் செய்யப்படுகிறது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல்மலை கிராம பகுதியில் பெய்த மழையால் நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறிய அதிகப்படியான நீரால் வாய்க்காலில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் நீருடன் சகதி, மண் கற்கள் கலந்து அருகே உள்ள விவசாய நிலத்தில் விழுந்தது. இதனால் மலைப்பூண்டு பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நீர் மற்றும் சரிந்த மண் ஆகியவை அதிகப்படியாக இந்த நிலப்பகுதியில் விழுந்ததில் விவசாய நிலமும், அங்கு பயிரிடப்பட்டு இருந்த மலைப்பூண்டும் சேதமடைந்தது. சேதமடைந்த விவசாய நிலத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொடைக்கானலில் மண்சரிவு
- கோதைக்கானல்
- பூந்தி மலைக்ராம்
- திண்டுக்கல் மாவட்டம்
- கும்படி பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம்
- சோலும்பாரா மண் கழிமுகம்
