×

அண்ணாமலையார் கோயிலில் ரூ.3.47 கோடி உண்டியல் காணிக்கை திருவண்ணாமலை

திருவண்ணாமலை, நவ. 21: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. அதில், ரூ.3.47 கோடி காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி கடந்த ஐப்பசி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடந்தது.

கோயில் இணை ஆணையர் பரணிதரன் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் நேரடியாக காணும் வகையில் கோயில் இணையதளத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. அப்போது, கோயில் உண்டியலில் ₹3 கோடியே 47 லட்சத்து 56 ஆயிரத்து 689 யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 104 கிராம் தங்கம், 2690 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பின்னர் உண்டியல் காணிக்கை தொகை, கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.

Tags : Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Annamalaiyar ,Temple ,
× RELATED திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை...