×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும் என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் அக்டோபரில் உத்தரவு பிறப்பித்தது. ‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று 4 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 250 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 736 பக்க அறிக்கை தயாரித்துள்ளது காவல் துறை. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி குற்றபத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். சிபிஐ விசாரணை என்பது காவல் துறை செயல்பாட்டை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது’ என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Tags : Supreme Court ,CBI ,Armstrong ,Delhi ,Tamil Nadu government ,
× RELATED கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும்...