அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தற்போது அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும். இந்த போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: