×

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் அரையிறுதிக்கு சின்னர் தகுதி

துரின்: உலகின் டாப் 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏடிபி இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது. அதன்படி, 56வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை நடைபெற்ற 2வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் அரையிறுதிக்கும் முன்னேறினார்.

Tags : ATP Finals ,Turin ,56th Men's Tennis Championship ,Turin, Italy ,
× RELATED ஹெச்சிஎல் ஸ்குவாஷ்: வேலவன் சாம்பியன்