×

மேகதாது அணை கட்ட நதிநீர் ஆணையம் ஒப்புதல் தர முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

டெல்லி: மேகதாது அணை கட்ட நதிநீர் ஆணையம் ஒப்புதல் தர முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரியில் போதுமான அணைகள் இருப்பதால் புதிதாக அணை தேவையில்லை. காவிரியில் குறுக்கே புதிதாக அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் 80 டிஎம்சி தண்ணீர் தடுக்கப்படும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பல நேரங்களில் காவிரியில் தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா இருந்திருக்கிறது. 80 டிஎம்சி நீரை தடுக்கவே கர்நாடகா புதிதாக அணை கட்ட முயற்சிக்கிறது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : River Water Commission ,Megadadu Dam ,Tamil Nadu Government ,Supreme Court ,Delhi ,Caviri ,Kaviri ,Tamil Nadu ,
× RELATED கோவாவில் கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 23 பேர் பலி