தேர்தல் மன்னன் பத்மராஜன் 225வது முறையாக போட்டி

சின்னசேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் பத்மராஜன். இவர் 1988 முதல் உள்ளாட்சி தேர்தல், எம்எல்ஏ, எம்பி, குடியரசுதலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுவரை இவர் 221 தடவை பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கின்னஸ் மற்றும் லிம்கா புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று பத்மராஜன் வந்து, ஒன்றியத்திற்கு உட்பட்ட வி.அலம்பளம் ஊராட்சி தலைவர் பதவிக்கும், அம்மையகரம் வார்டு உறுப்பினர் பதவிக்கும் மனுதாக்கல் செய்தார். அதைப்போல சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 11வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் வேட்பு மனுதாக்கல் செய்தார். இதையும் சேர்த்து அவர் 225வது முறையாக தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்….

The post தேர்தல் மன்னன் பத்மராஜன் 225வது முறையாக போட்டி appeared first on Dinakaran.

Related Stories: