×

உலகக்கோப்பை செஸ் போட்டி: டைபிரேக்கரில் இந்தியர்கள் அசத்தல் 10 பேர் 3வது சுற்று போட்டிக்கு தகுதி

கோவா: கோவாவில் நடக்கும் உலகக்கோப்பை செஸ் போட்டியின் முதல் சுற்றில் 16 இந்திய வீரர்கள் களம் கண்டனர். இதில், ஆரோன்யக் கோஷ், இனியன், அரவிந்த் சிதம்பரம், மற்றும் சூர்யா சேகர் கங்குலி ஆகியோர் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டனர். 2வது சுற்றுக்கு நேரடி தகுதி பெற்ற குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பெண்டலா ஹரிகிருஷ்ணா, தீப்தயன் கோஷ் மற்றும் கார்த்திக் வெங்கடராமன் – ஆகிய 5 பேர் கிளாசிக்கல் போட்டிகளில் 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று செய்து மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர். நேற்று நடந்த இரண்டாம் போட்டியில் இந்தியாவை சேர்ந்த விதித் குஜராத்தி, பிரணவ், பிரனேஷ், பிரக்ஞானந்தா, எஸ்.எல்.நாராயணன் ஆகியோர் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஏற்கனவே 5 இந்திய வீரர்கள் 3வது சுற்றுக்கு முன்னேறிய நிலையில், நேற்று மேலும் 5 வீரர்கள் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். நிஹால், ரௌனக் சத்வானி ஆகியோர் தோல்வியடைந்து, வெளியேறினர்.

Tags : World Cup Chess Tournament ,Indians ,Goa ,Aronya Ghosh ,Inian ,Arvind Chidambaram ,Suryasekar Ganguly ,
× RELATED ஹெச்சிஎல் ஸ்குவாஷ்: வேலவன் சாம்பியன்