×

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

இடைப்பாடி, நவ.5: தமிழ்நாடு மின்சார வாரியம் இடைப்பாடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று(5ம் தேதி) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் இடைப்பாடி, சித்தூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, தேவூர் புறநகர், கொங்கணாபுரம், கண்ணந்தேரி புறநகர், ஜலகண்டாபுரம் வடக்கு, தெற்கு, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர்கள் பங்கேற்று, தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என இடைப்பாடி கோட்ட செயற்பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

Tags : Edappadi ,Tamil Nadu Electricity Board ,Executive ,Mettur Superintending ,Edappadi, ,Chittoor ,
× RELATED விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது