சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. மார்ச் 2ல் தொடங்கி மார்ச் 26 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. தமிழ்நாட்டில் மார்ச் 11ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. மார்ச் 11 ல் தொடங்கி ஏப். 6 வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
