- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- மத்திய அமைச்சர்
- ஜெய்ஷங்கர்
- இலங்கை கடற்படை
- சென்னை
- நாகப்பட்டினம்
- ராமநாதபுரம்
சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நாகையைச் சேர்ந்த 31 மீனவர்கள், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்ததற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார். மீனவர்களின் வாழ்க்கையும் அவர்களது வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.
