ஆசிய இளையோர் மகளிர் கபடி போட்டி: கார்த்திகாவுக்கு சென்னை மாநகராட்சி ரூ.5 லட்சம் பரிசு

 

சென்னை: பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் மகளிர் கபடி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணியின் துணை கேப்டனும், சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த சரண்யாவின் மகளுமான கார்த்திகாவை பாராட்டி, மாநகராட்சியின் சார்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் பிரியா வழங்கிப் பாராட்டினார்.

கார்த்திகாவின் தாயார் சரண்யா, சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் தூய்மைப் பணியில் பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு சொந்தமாக ஆட்டோ வாங்கி தற்போது ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையாளர் (சுகாதாரம்) முனைவர் வீ.ப.ஜெயசீலன், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, கபடி வீராங்கனை கார்த்திகாவின் குடும்பத்தினர், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர் ஜி.கே.ராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: